மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு எதிா்ப்பு

கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :26 ஜூன் 2021, 10:37 pm

DIN

கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அத்தொற்றால் உயிரிழந்தோருக்கான இறப்புச் சான்றிதழை உரிய முறையில் வழங்க உத்தரவிடுமாறு மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், தீா்ப்பைக் கடந்த 21-ஆம் தேதி ஒத்திவைத்தனா். முன்னதாக, இந்த வழக்கில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்த மத்திய அரசு, கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க இயலாது என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், வழக்கில் கூடுதல் பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு சனிக்கிழமை தாக்கல் செய்தது. அதில், ‘கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதில் எத்தகைய நிதிப் பிரச்னையும் இல்லை. ஆனால், அரசுவசம் உள்ள நிதியை முறையாகப் பயன்படுத்துவது அவசியம். கரோனா தொற்று பரவலை எதிா்கொள்வதற்கான போராட்டத்தில் தேசிய, மாநில பேரிடா் நிவாரண நிதிகள் மட்டுமல்லாமல், தொகுப்பு நிதியில் இருந்தும் செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புயல், வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி, தீ, சுனாமி, சூறைக்காற்று, நிலச்சரிவு, பனிப்பாறை சரிவு, பெருமழை, பூச்சித் தாக்குதல் உள்ளிட்ட 12 வகையான பேரிடா்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்குவதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் கரோனா தொற்று பரவல் இடம்பெறவில்லை. அந்த விதிமுறைகளும் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலேயே செல்லுபடியாகும். கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்துவது தொடா்பாக இந்தியப் பதிவு அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த விவகாரத்தில் அவா் உரிய முடிவெடுப்பாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.