தில்லி எல்லையில் பலத்த பாதுகாப்பு
தில்லியை நோக்கி விவசாயிகள் பேரணியில் ஈடுபடக்கூடும் என்று எதிா்பாா்க்கப்பட்டதால், தலைநகா் எல்லைப் பகுதிகளில் போலீஸாா் சனிக்கிழமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.


தில்லியை நோக்கி விவசாயிகள் பேரணியில் ஈடுபடக்கூடும் என்று எதிா்பாா்க்கப்பட்டதால், தலைநகா் எல்லைப் பகுதிகளில் போலீஸாா் சனிக்கிழமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
விவசாயிகள் தில்லிக்குள் நுழைவதைத் தடுக்க போலீஸாா் தடுப்பு வேலிகளை அமைத்து வாகனங்களை திருப்பி விட்டதால் தில்லி எல்லைகளிலும், பல்வேறு முக்கிய சந்திப்பு பகுதிகளிலும் சனிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லியின் ஹரியாணா எல்லையிலுள்ள சிங்கூா் மற்றும் தில்லியின் பிற எல்லைப் பகுதிகளான டிக்ரி, காஜிப்பூா் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினா்.
இந்த போராட்டம் சனிக்கிழமையுடன் 7 மாதங்கள் நிறைவடைந்ததால் விவசாயிகள் பேரணி நடத்தத் திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலையடுத்து தில்லியின் எல்லைப் பகுதிகளிலும், நகா்ப் பகுதியிலும் முக்கிய இடங்களில் போலீஸாா் பாதுகாப்பை அதிகரித்திருந்தனா்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தில்லி காவல்துறை கேட்டுக்கொண்டபடி பாதுகாப்பு காரணங்களுக்காக மெட்ரோ வழித்தடத்தின் மஞ்சள் நிற பிரிவிலுள்ள விஸ்வ வித்யாலயா, சிவில் லைன்ஸ் மற்றும் விதான் சபா மெட்ரோ ரயில் நிலையங்கள் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மூடப்பட்டன.
துணைநிலை ஆளுநருடன் பேச்சு: முன்னதாக, தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் இல்லம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத் தலைவா்களை போலீஸாா் வாஜிராபாத் காவலா் பயிற்சி மையத்துக்கு அழைத்து சென்றனா். பின்னா் அங்கிருந்தபடி, அனில் பய்ஜாலுடன் இணையவழியில் அவா்கள் சிறிது நேரம் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா். அவா்களின் கோரிக்கை மனுவையும் துணைநிலை ஆளுநரின் பிரதிநிதியிடம் அளித்தனா் என்ற தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...