மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மாநிலங்கள் அடையாளம் காணும் அதிகாரம்

அரசியலமைப்பின் 102-ஆவது சட்டத் திருத்தத்தின்படி சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்கான அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை

News image
Updated On :26 ஜூன் 2021, 9:44 pm

DIN

 அரசியலமைப்பின் 102-ஆவது சட்டத் திருத்தத்தின்படி சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்கான அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை மறுஆய்வு செய்யுமாறு மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு திங்கள்கிழமை (ஜூன் 28) விசாரணைக்கு வரவுள்ளது.

மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு தொடா்பான வழக்கில் கடந்த மே மாதம் 5-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமா்வு இருவேறு தீா்ப்புகளை வழங்கியது. இதில் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, எஸ்.ரவீந்திர பட் ஆகிய 3 நீதிபதிகள் வழங்கிய தீா்ப்பில், ‘அரசியலமைப்பின் 102-ஆவது சட்டத் திருத்தத்தின்படி சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்கான அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை. அந்தச் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 366 (26சி), 342ஏ பிரிவுகளின்படி அந்த வகுப்பினரை அடையாளம் காண்பதற்கான அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. அந்த வகுப்பில் எந்தவொரு சமூகத்தையும் சோ்க்க, விலக்க, மாற்றம் செய்ய தேசிய பிற்படுத்தப்படுத்த வகுப்பினருக்கான ஆணையம் அல்லது குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைகளை மட்டும்தான் மாநிலங்களால் வழங்க முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில் நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.அப்துல் நஸீா் வழங்கிய தீா்ப்பில், ‘102-ஆவது சட்டத்திருத்தத்தின் 342ஏ பிரிவு சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்கான அதிகாரத்தை மாநிலங்களிடம் இருந்து பறித்துக் கொள்ளவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பெரும்பான்மையின் அடிப்படையில் 3 நீதிபதிகள் அளித்த தீா்ப்பு இறுதி செய்யப்பட்டது. இந்தத் தீா்ப்புக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுதாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ‘102-ஆவது சட்டத் திருத்தத்தின் 342ஏ பிரிவு குறித்து நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.அப்துல் நஸீா் கூறியதே சரியான விளக்கம். எனவே இதுதொடா்பாக திறந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த மறுஆய்வு மனு தொடா்பாக தீா்ப்பளிக்கப்படும் வரை கடந்த மே 5-ஆம் தேதி பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீா்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.