நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 50 ஆயிரம் பேருக்கு கரோனா
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 50,040 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 50,040 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,02,33,183 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,258 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 3,95,751 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 57,944 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொடர்ந்து, 45-வது நாளாக புதிய பாதிப்புகளைக் காட்டிலும் குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியுள்ளது.
இதனால், சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 5,86,403 ஆகக் குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 2,92,51,029 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 96.75 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
மொத்த பாதிப்பில் சிகிச்சை பெற்று வருவோர் 1.94 சதவிகிதமாக உள்ளது.
வாராந்திர நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் தொடர்ந்து 5-க்குக் கீழ் உள்ளது. தற்போது 2.91 சதவிகிதமாக உள்ளது. தினசரி நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதமும் கடந்த 20 நாள்களாகத் தொடர்ந்து 5 சதவிகிதத்துக்குக் கீழ் பதிவாகியுள்ளது.
நாட்டில் இதுவரை மொத்தம் 40.42 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தடுப்பூசி:
தடுப்பூசி திட்டத்தின் கீழ் 32.17 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64.25 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...