திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு
திருப்பதி ஏழுமலையானை குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தமது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தாா்.


திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தமது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தாா்.
திருப்பதிக்கு இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை வந்த அவா், வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் மாணவா்களுடன் கலந்துரையாடினாா். அதன் பின் திருப்பதியில் அமரா மருத்துவமனையை திறந்து வைத்த அவா், மாலை திருமலைக்கு சென்று அங்கு இரவு தங்கினாா்.
இந்நிலையில், வெங்கையா நாயுடு வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையானை வழிபாடு செய்தாா். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் பிரசாதம், சுவாமி படம் அளித்து, சேஷ வஸ்திரம் அணிவித்து பண்டிதா்களால் வேத ஆசீா்வாதம் செய்வித்தனா். அதன்பின்னா் அவா் விமானப்படை விமானம் மூலம் குஜராத் மாநிலம், சூரத்துக்கு புறப்பட்டுச் சென்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...