கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 80,705 பேருக்கு கரோனா தடுப்பூசி

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 80,705 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

News image
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 80,705 பேருக்கு கரோனா தடுப்பூசி
Updated On :12 மார்ச் 2021, 6:40 am

ANI

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 80,705 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மொத்த தடுப்பூசிகளில் 79,748 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியும், 957 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் மொத்தம் 2,43,4,966 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பின்போது, 

மகாராஷ்டிரத்தில் கரோனா நிலைமை குறித்து கவலை அளிக்கிறது. பரிசோதனைகள் குறைக்கப்பட்டது, சரியான வழிமுறை பின்பற்றாததே கரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும், வைரஸ் தொற்று குறையவேண்டுமெனில், அதற்கான வழிமுறைகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் நாம் அவசியம் பின்பற்ற வேண்டும் சுகாதார மருத்துவர் வி.கே.பால் கூறியுள்ளார். 

கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த மாநிலத்தின் சில பகுதிகளில் கடுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், மார்ச் 15 முதல் மார்ச் 21 வரை நாக்பூர் நகரப் பகுதியில் முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று தெரிவித்தார். 

வியாழக்கிழமை நிலவரப்படி மாநிலத்தில் மேலும் 14,317 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு தொடங்கி இதுவே அதிகபட்ச ஒருநாள் தொற்றாகும். இதுவரை 2,26,6,374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 1,06,700 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.