டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மேற்கு வங்கத் தேர்தல்: மார்ச் 21இல் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் அமித்ஷா

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மார்ச் 21ஆம் தேதி பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா வெளியிடுகிறார்.

News image
அமித்ஷா
Updated On :19 மார்ச் 2021, 9:31 am

DIN

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மார்ச் 21ஆம் தேதி பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா வெளியிடுகிறார்.

மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆளும் திரிணமூல் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கை மார்ச் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில பாஜக தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா வெளியிட்டார். 

மார்ச் 21ஆம் தேதி கல்கத்தாவில் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட உள்ளார். இந்த தேர்தல் அறிக்கையில் வெளியாக உள்ள அறிவிப்புகள் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.