கேரள சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் 3 பேரின் வேட்புமனுக்கள் உரிய ஆவணங்கள் இணைக்காத காரணத்தால் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டன.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, கூட்டணிக் கட்சிகளுடன் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்காக பாஜக உள்பட அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான அதிமுக சார்பில் போட்டியிடும் தேவிகுளம், தலசேரி மற்றும் குருவாயூர் தொகுதி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் பாஜக தேசியத் தலைவரின் கையொப்பமிட்ட ஆவணங்கள் இணைக்கத் தவறிய காரணத்தால் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டன.
இதனால் தலசேரியில் போட்டியிட இருந்த கண்ணூர் மாவட்டத்தின் பாஜக தலைவர் ஹரிதாஸ், தேவிகுளம் அதிமுக வேட்பாளர் தனலஷ்மி, குருவாயூர் தொகுதி பாஜக வேட்பாளர் நிவேதிதா ஆகியோர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இது பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் அதிமுக- அன்பழகன் உறுதி

எம்எல்ஏ விடுதி பராமரிப்புப் பணி ஒப்பந்தப்புள்ளி: நடவடிக்கைகளைத் தொடர உயா்நீதிமன்றம் அனுமதி

விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

‘முத்தமிழறிஞா் கலைஞா் அரங்கம்’: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

