உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி என்.வி.ரமணாவை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார் தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக்காலம் ஏப்ரல் 23 ஆம் தேதி நிறைவடைய உள்ளது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்க மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு கடிதம் அனுப்பினார்.
இதற்கு பதில் அளித்துள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி என்.வி.ரமணாவை பரிந்துரை செய்துள்ளார்.
நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு அடுத்தபடியாக உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருப்பவர் என்.வி.ரமணா. இவரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26, 2022 வரை உள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த என்.வி.ரமணா, கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி அதைத் தொடர்ந்து 2014 பிப்ரவரியில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! மம்தா வென்ற தொகுதியில் சுவேந்து அதிகாரி போட்டி
மே வெளியீட்டில் கருப்பு?

கிட்னியைத் தொடும் பதிவு..! பும்ராவைக் கேலி செய்த மனைவி!

கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

