/

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட உத்தரப்பிரதேச ஆளுநர்

உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். 

News image
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட உத்தரப்பிரதேச ஆளுநர்
Updated On :25 மார்ச் 2021, 11:02 am

DIN

உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். 

நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நாடு கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளது. இன்று நான் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். இது முற்றிலும் பாதுகாப்பானது.அனைத்து மக்களும் தங்களது முறை வரும்போது கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு ஆனந்திபென் படேல் கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.