மீண்டும் பொதுமுடக்கம் இல்லை: தெலங்கானா முதல்வர்
தெலங்கானாவில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.

முதல்வர் சந்திரசேகர் ராவ்

முதல்வர் சந்திரசேகர் ராவ்
தெலங்கானாவில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.
தெலங்கானாவில் கரோனா பரவல் சற்று அதிகரித்து வருவதையடுத்து மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா என மக்கள் அச்சத்தில் இருப்பதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் சந்திரசேகர் ராவ்,
மாநிலத்தில் மீண்டும் பொதுமுடக்கம் இருக்காது. எனவே மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்கனவே பொருளாதார ரீதியாக நாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தினால் மக்கள் மற்றும் அரசின் நிதி நிலைமை கேள்விக்குறி ஆகிவிடும்.
ஆதலால் மக்கள் வெளியில் செல்லும்போது தயவுசெய்து முகக்கவசங்களை அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கரோனா விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
முன்னதாக, தெலங்கானாவில் அரசு விடுதிகளில் உள்ள சில மாணவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் 23 ஆம் தேதி மூடப்பட்டன.
மேலும் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீட்டு மசோதா குறித்து, 'முஸ்லிம்கள், எஸ்.சி., எஸ்.டி.,க்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இடஒதுக்கீட்டின் சதவீதத்தை தீர்மானிப்பதில் மாநிலங்களுக்கு மத்திய அரசு சுதந்திரம் வழங்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...