டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெண்களுக்கு இலவசக் கல்வி: புதுச்சேரியில் பாஜக தேர்தல் அறிக்கை

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

News image
பெண்களுக்கு இலவசக் கல்வி: புதுச்சேரியில் பாஜக தேர்தல் அறிக்கை
Updated On :26 மார்ச் 2021, 7:55 am

DIN

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக - அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தோ்தலைச் சந்திக்கின்றன. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸ் 16, பாஜக 9, அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

புதுவை மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி தனியார் உணவகத்தில் இன்று நடைபெற்றது. 

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு  சிறப்புரையாற்றினார்.

பாஜக தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்:
புதுச்சேரியில் ஒருங்கிணைந்த ஆடை உற்பத்தி தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும்.

புதுச்சேரிக்கு தனி பள்ளிக்கல்வி தேர்வாணையம் உருவாக்கப்படும்.

9 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும்.
மழலையர் முதல் உயர்கல்வி வரை பெண்களுக்கு இலவச கல்வி.
கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி.
உயர்கல்வி பயிலும் மாணவிளுக்கு இலவச இருசக்கர வாகனம்.
எந்த ஆன்மிக வழிபாட்டு தலங்களும் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படாது.
மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு 150 அடி சிலை நிறுவப்படும்.
கரோனா பேரிடர் காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்பட்ட கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி.
மகளிர் அனைவருக்கும் இலவச பொது போக்குவரத்து வசதி.
அரசு மற்றும்  பொதுத்துறை நிறுவனங்களில் 50% பெண்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் மற்றும் காவல்துறை பணியிடங்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

அனைத்து மகளிருக்கும் இலவச மருத்துவ உதவிகள்.

2.5 லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு.

நடமாடும் நியாயவிலைக் கடைகள் .

சென்னையுடன் புதுச்சேரி மற்றும் காரைக்கால் இணைப்பதற்காக கடல் வழி சேவை தொடங்கப்படும்.

24 மணி நேரமும் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி.

அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.2000 உதவித்தொகை பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

மீனவர்களுக்கு நவீன வீடுகள் கட்டித்தரப்படும்.

மீன்பிடி கப்பல்களுக்கு ரூ.11 லட்சம் வரை மானியம்.

அனைத்து மீனவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 வரை உதவித்தொகை.

மீன்பிடி தடைக்காலம் நிவாரணம் ரூ 5 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை உயர்த்தப்படும்.

மூடப்பட்ட நூற்பாலைகளும், பஞ்சாலைகள் மற்றும் கூட்டுறவு மில்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைவருக்கும் பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம்.

50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை.

மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் ரூ.3000 முதல் ரூ. 5000 வரை உயர்த்தி வழங்கப்படும்.

மூத்த குடிமக்களுக்கு ஆன்மீக சுற்றுலா திட்டம்.

ஊனமுற்றவர் மாத ஓய்வூதியம்  ரூ.1750 லிருந்து ரூ.4000 வரையும், விதவை ஓய்வூதியம் ரூ.2000 முதல் ரூ.3000 எனவும் உயர்த்தி வழங்கப்படும்.

புதிய அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்தப்படும்.

பொதுமக்கள் அரசு சேவைகளை எளிதில் பெற Puducherry.gov.in வலைதளம் மற்றும் செயலி தொடங்கப்படும்.

அனைத்து கல்வி மற்றும் வேலை வாய்ப்பு நடவடிக்கைகளிலும் பொருளாதார ரீதியான பலவீனமான பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தனி மாநில அந்தஸ்து  கோரிக்கை மற்றும் 6,000 கோடிக்கு மேற்பட்ட கடன் தள்ளுபடி வாக்குறுதிகள் இடம்பெறவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.