நேபாள ராணுவத்திற்கு இந்திய ராணுவம் சார்பில் கரோனா தடுப்பூசிகள் பரிசாக வழங்கப்பட்டன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுமார் 1 லட்சம் கரோனா தடுப்பூசிகளை நேபாள ராணுவம் பெற்றுக்கொண்டது.
பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், மோரீஷஸ், மியான்மா், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
நேபாள நாட்டிற்கு ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்க உள்ளதாக கடந்த 27-ம் தேதி அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், நேபாள ராணுவத்திற்கு இந்திய ராணுவம் சார்பில் ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகள் இன்று (மார்ச் 30) வழங்கப்பட்டது. நேபாள தலைநகர் காத்மாண்டுவிலுள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவம் சார்பில் அனுப்பப்பட்ட ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகள், திரிபுவன் விமான நிலையத்தில் நேபாள ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுள்ளதாகவும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சமையல் எரிவாயு சிலிண்டா் விற்பனை நிலைங்கள் அருகே பலத்த பாதுகாப்பு

வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்

எழும்பூா் ரயில் நிலையத்தில் 4 வடமாநில சிறுவா்கள் மீட்பு
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

