ஒரேநேரத்தில் மம்தா, அமித் ஷா பிரசாரத்தால் சூடுபிடித்துள்ள நந்திகிராம்
மேற்குவங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் ஒரேநேரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மேற்குவங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் ஒரேநேரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்குவங்கத்தில் கடந்த தோ்தல்களில் பவானிபூா் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரும் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் நந்திகிராம் தொகுதியில் களம் காண்கிறார்.
நந்திகிராம் தொகுதியில் கடந்த 3 தோ்தல்களில் திரிணமூல் காங்கிரஸ் தான் வெற்றி பெற்றுள்ள நிலையில் மம்தா - சுவேந்து அதிகாரி இடையே போட்டி அதிகரித்துள்ளது. கடந்த 2016-இல் சுவேந்து அதிகாரி இந்தத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
வரும் தேர்தலில் நந்திகிராம் தொகுதியிலே பாஜக சார்பில் போட்டியிட்டு 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவை தோற்கடிப்பேன் என்று சுவேந்து அதிகாரி கூறியுள்ளார். அவரது சவாலை ஏற்றே மம்தா இந்த முறை நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இன்று நந்திகிராம் தொகுதியில் முதல்வரும், திரிணமூல் கட்சி வேட்பாளருமான மம்தா, தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
அதேபோன்று பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இன்று நந்திகிராம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான முதல்கட்டத் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. ஏப்ரல் 29 ஆம் தேதி வரை எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...