எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இது மேற்கு வங்கத்தின் வெற்றி: மம்தா பானர்ஜி

சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது மேற்கு வங்கத்தின் வெற்றி என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 மே 2021, 1:45 pm

DIN


சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது மேற்கு வங்கத்தின் வெற்றி என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து மாபெரும் வெற்றியைப் பெறுகிறது.

இதுகுறித்து மம்தா கூறியது:

"பாஜக தேர்தலில் தோல்வியடைந்துள்ளது. பாஜக அழுக்கு நிறைந்த அரசியலைக் கையாண்டது. தேர்தல் ஆணையத்தின் அச்சுறுத்தலை நாங்கள் எதிர்கொண்டோம்.

நந்திகிராம் தொகுதி முடிவைக் குறித்து கவலைகொள்ள வேண்டாம். நந்திகிராம் தொகுதி மக்கள் எந்தத் தீர்ப்பைக் கொடுத்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன். கவலைகொள்ள மாட்டேன். நாங்கள் 221-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். பாஜக தோல்வியடைந்துள்ளது.

தேர்தல் வெற்றிப் பேரணியை மேற்கொள்ள வேண்டாம் என கட்சித் தொண்டர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மாபெரும் வெற்றிக்கு நன்றியுடன் இருப்போம். நான் உடனடியாக கரோனா தொற்றுக்கு எதிராகப் பணியாற்றத் தொடங்க வேண்டும். கரோனா சூழல் காரணமாக பதவியேற்பு விழா எளிமையாகவே இருக்கும்" என்றார் மம்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.