தேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

கா்நாடகத்தில் ஒரே நாளில் 44,631 பேருக்கு கரோனா; 292 பேர் பலி

கா்நாடகத்தில் ஒரே நாளில் 44,631 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :4 மே 2021, 3:09 pm

DIN

கா்நாடகத்தில் ஒரே நாளில் 44,631 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 44,631 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது இன்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,90,934 ஆக உயா்ந்துள்ளது. 

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 24,714 போ் இன்று வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 12,10,013 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போதைய நிலவரப்படி 4,64,363 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 292 போ் இன்று இறந்துள்ளனா். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 16,538ஆக உயர்ந்துள்ளது. 3,51,273 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.