பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆந்திரம்: சுண்ணாம்பு சுரங்கத்தில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் 10 பேர் பலி

ஆந்திரத்தில் சுண்ணாம்பு சுரங்கத்தில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் தொழிலாளர்கள் 10 பேர் பலியானார்கள். 

News image
Updated On :8 மே 2021, 2:29 pm

DIN

ஆந்திரத்தில் சுண்ணாம்பு சுரங்கத்தில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் தொழிலாளர்கள் 10 பேர் பலியானார்கள். 

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தின் மாமில்லப்பள்ளி கிராமத்தில் சுண்ணாம்பு சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சுரங்கத்துக்கு இன்று காலை ஜெலட்டின் குச்சிளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. வழக்கம்போல், சுரங்கத் தொழிலாளர்கள் லாரியில் இருந்து ஜெலட்டின் குச்சிகளை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெலட்டின் குச்சிகள் எதிர்பாராதவிதமாக வெடித்து விபத்து ஏற்பட்டது. 

தகவல் அறிந்ததும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் தொழிலாளர்கள் 10 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே வெடிவிபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும் விவத்து குறித்து விரிவான விசாணை நடத்தவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். வெடிவிபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களில் பலர், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த கிராமமான புலிவேந்துலாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.