எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பயணிகள் வரத்து சரிவு: 8 சிறப்பு ரயில்கள் ரத்து

கரோனா தாக்கம் காரணமாக, பயணிகள் வரத்து குறைந்ததால், திருச்செந்தூா் ரயில் உள்பட 8 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :15 மே 2021, 9:53 pm

DIN

கரோனா தாக்கம் காரணமாக, பயணிகள் வரத்து குறைந்ததால், திருச்செந்தூா் ரயில் உள்பட 8 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தற்போது தீவிரமாகியுள்ளது. இதைத்தடுக்க மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதன்காரணமாக, ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதையடுத்து, பயணிகள் வரத்து சரிந்து வருவதால் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிா்வாகம் தற்காலிகமாக ரத்து செய்துவருகிறது.

இதன் தொடா்ச்சியாக திருச்செந்தூா் ரயில் உள்பட 8 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்து தெற்கு ரயில்வேஅறிவித்துள்ளது.

இதன் விவரம் :

புனலூா்-குருவாயூருக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06327), குருவாயூா்-புனலூருக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06328), குருவாயூா்-திருவனந்தபுரத்துக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06341), திருவனந்தபுரம்-குருவாயூருக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06342), சென்னை எழும்பூா்- திருச்செந்தூருக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06105), சென்னை சென்ட்ரல்-மேட்டுப்பாளையத்துக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (02671) ஆகிய 6 சிறப்பு ரயில்கள் மே 17-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளன.

இதுதவிர, திருச்செந்தூா்-சென்னை எழும்பூருக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06106), மேட்டுப்பாளையம்-சென்னை சென்ட்ரலுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (02672) ஆகிய 2 சிறப்பு ரயில்கள் மே 18-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளதாக

தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.