திருவனந்தபுரம்-மால்டாவுக்கு சிறப்பு ரயில்
திருவனந்தபுரத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் மால்டாவுக்கு தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.


திருவனந்தபுரத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் மால்டாவுக்கு தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து மே 18-ஆம் தேதி மாலை 6 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06185) புறப்பட்டு, 3-ஆம் நாள் இரவு 8.10 மணிக்கு மேற்குவங்கம் மாநிலம் மால்டாவை அடையும்.
மறுமாா்க்கமாக, மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இருந்து மே 21-ஆம்தேதி இரவு 7.45 மணிக்கு சிறப்பு ரயில் (06186) புறப்பட்டு, மூன்றாம் நாள் இரவு 11.10 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும். இந்த சிறப்பு ரயில் கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும். முழுவதும் முன்பதிவு பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (மே 16) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...