தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு: இதுவரை 3 பேர் பலி 

மும்பை மாநகரில் அடுத்த சில மணி நேரங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :18 மே 2021, 6:31 am

PTI


மும்பை மாநகரில் அடுத்த சில மணி நேரங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கனமழையுடன், 80-90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று மும்பை மாநகராட்சி காலை 7 மணிக்கு வெளியிடப்பட்ட இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இதுதொடர்பாக மும்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

கனமழை, சூறாவளிக் காற்றில் சிக்கி பால்கரில் 2 பேர் பேரும், தாணேவில் ஒருவரும் உயிரிழந்தனர். 

திங்களன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, மும்பை கடற்கரையிலிருந்து குஜராத் நோக்கி நகர்ந்த புயலானது, ​​தெற்கு மும்பையின் கொலாபாவில் 189 மிமீ மழையும், மேற்கு புறநகரில் உள்ள சாண்டாக்ரூஸில் 194 மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக பிஎம்சி தெரிவித்துள்ளது.

மும்பை மற்றும் அதன் அண்டை பகுதிகளில் 114 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதோடு, பலத்த மழையும் பெய்தது.

தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.