மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கேரளம்: எதிர்க்கட்சித் தலைவராக வி.டி.சதீசன் நியமனம்

கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி.சதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :22 மே 2021, 12:08 pm

DIN

கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி.சதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கேரளத்தில் 140 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து அந்த மாநில முதல்வராக பினராயி விஜயன் வியாழக்கிழமை மீண்டும் பதவியேற்றார். அவருடன் 20 போ் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது. இந்த நிலையில் கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸைச் சேர்ந்த வி.டி.சதீசனை தில்லி மேலிடம் நியமனம் செய்துள்ளது. 

கடந்த பினராயி விஜயன் ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவராக ரமேஷ் சென்னிதலா செயல்பட்டார். எனவே, இந்தமுறையும் அவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக வி.டி.சதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சதீசன் எர்ணாகுளம் மாவட்டம், பறவூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-ஆக தேர்வு செய்யப்பட்டவர். 

அத்துடன் இவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்ட வி.டி.சதீசனுக்கு ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி 41 இடங்களில் வெற்றிபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.