எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பத்திரிகையாளர்களுக்குத் தனி தடுப்பூசி மையம்: தில்லி முதல்வர்

கரோனா காலத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி மையத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தொடக்கி வைத்தார். 

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :31 மே 2021, 7:43 am

DIN

கரோனா காலத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி மையத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தொடக்கி வைத்தார். 

நாட்டின் தலைநகரான தில்லியில் கரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வந்தது. 

எனினும் அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கையால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 

18 முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் தில்லி சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தில்லி ஐஓடி மெட்ரோ நிலையம் அருகே பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான மையத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தொடக்கி வைத்தார். 

இதில் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

பத்திரிகையாளரின் குடும்பத்தைச் சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்டவர்களும், 18 முதல் 45 வயதிற்குட்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.