எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நீட் மறுதேர்வு விவகாரத்தில் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட உச்ச நீதிமன்றம்

இரண்டு மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வை மீண்டும் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :12 நவம்பர் 2021, 10:40 am

DIN

இரண்டு மாணவர்களுக்கு நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இரண்டு மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வை நடத்த மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதுகுறித்து மத்திய அரசு இன்று தாக்கல் செய்த மனுவில், "இந்தாண்டு நீட் தேர்வை 16 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வை மீண்டும் நடத்த அனுமதி வழங்கினால், அனைத்து ஆண்டும், ஏதாவது தவறுகள் நடைபெறும் போது தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுப்பர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல். என். ராவ், "மாணவர்களுக்காக நாங்கள் வருந்துகிறோம், அவர்களுடன் அனுதாபப்படுகிறோம். ஆனால் மறு தேர்வை நடத்த முடியாது" என்றார். 

சோலாப்பூர் நீட் தேர்வு மையத்தில், பொருத்தமற்ற கேள்வித்தாள்களையும் விடைத்தாள்களையும் கண்காணிப்பாளர்கள் அளித்ததாகவும் இந்த தவறை சுட்டிகாட்டியபோது அதை திருத்தி கொள்ளவில்லை எனக் கூறி வைஷ்ணவி போபாலே, அபிஷேக் கப்சே ஆகிய மாணவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த அக்டோபர் 20ஆம் தேதி, மாணவர்களுக்கு ஆதரவாக மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இரண்டு மாணவர்களுக்கு மட்டும் புதிதாக தேர்வை நடத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு, நவம்பர் 1ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முன்னதாக, அக்டோபர் 28ஆம் தேதி, நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.