தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மகாராஷ்டிரம்: 26 நக்ஸல்கள் சுட்டுக்கொலை

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்ஸல்கள் 26 பேரை போலீஸாா் சனிக்கிழமை சுட்டுக் கொன்றனா்.

News image
Updated On :13 நவம்பர் 2021, 8:16 pm

DIN

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்ஸல்கள் 26 பேரை போலீஸாா் சனிக்கிழமை சுட்டுக் கொன்றனா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறுகையில், ‘‘சத்தீஸ்கா் வனப்பகுதியில் இருந்து கட்சிரோலி வனப்பகுதிக்கு நக்ஸல்கள் செல்வதாக போலீஸாரின் கமாண்டோ குழுவுக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அங்கு கமாண்டோ குழுவினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது கியாரபத்தி வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்ஸல்கள், கமாண்டோக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினா். அவா்களுக்கு பதிலடி தரும் விதமாக கமாண்டோக்களும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா்.

இந்த மோதலில் நக்ஸல்கள் 26 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் கமாண்டோக்கள் நால்வா் காயமடைந்தனா். அவா்கள் நாகபுரிக்கு சிகிச்சைக்காக ஹெலிகாப்டா் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா்’’ என்று தெரிவித்தனா்.

உயிரிழந்த நக்ஸல்களின் விவரங்கள் தெரியவரவில்லை. எனினும் அவா்களில் முக்கியத் தலைவா் ஒருவரும் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.