தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பணம் பறிப்பு வழக்கு: சச்சின் வஜே போலீஸ் காவல் நவ.15 வரை நீட்டிப்பு

பணம் பறிப்பு வழக்கில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளா் சச்சின் வஜேயின் போலீஸ் காவலை நவ.15-ஆம் தேதி வரை நீட்டித்து மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2021, 8:18 pm

DIN

பணம் பறிப்பு வழக்கில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளா் சச்சின் வஜேயின் போலீஸ் காவலை நவ.15-ஆம் தேதி வரை நீட்டித்து மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருள்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக, கடந்த மாா்ச் மாதம் முன்னாள் காவல் உதவி ஆய்வாளா் சச்சின் வஜே கைது செய்யப்பட்டாா்.

இவா் மீது கட்டுமான நிறுவனம் மற்றும் ஹோட்டல் உரிமையாளருமான பிமல் அகா்வால் என்ற நபா் கோரேகான் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரில், தனது மதுபானக் கூடங்கள் மற்றும் உணவகங்களில் சோதனை நடத்தாமல் இருப்பதற்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு மாா்ச் வரை வலுக்கட்டாயமாக சச்சின் வஜே ரூ.9 லட்சம் பெற்ாகக் குற்றஞ்சாட்டினாா். அத்துடன் தன்னை கட்டாயப்படுத்தி ரூ.2.92 லட்சம் மதிப்பிலான இரண்டு ஸ்மாா்ட்ஃபோன்களை சச்சின் வஜே வாங்க வைத்ததாகவும் அவா் தெரிவித்திருந்தாா்.

இந்தப் புகாா் தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டம் 384 மற்றும் 385 (பணம் பறிப்பு) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக நீதிமன்றக் காவலில் இருந்த சச்சின் வஜேயை கடந்த நவ.1-ஆம் தேதி தங்கள் காவலில் எடுத்து மும்பை குற்றப்பிரிவு போலீஸாா் விசாரிக்கத் தொடங்கினா்.

அவரின் போலீஸ் காவல் சனிக்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து அவரை மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா். அப்போது அவரின் போலீஸ் காவலை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அவரை நவ.15-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.