/

கர்நாடகம்: கடந்த 10 மாதத்தில் சாலை விபத்துகளால் 7,523 பேர் பலி

கர்நாடகத்தில் கடந்த 10 மாதத்தில் நடந்த சாலை விபத்துகளில் இதுவரை 7,523 பேர் பலியாகியிருப்பதாக அம்மாநில போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

News image
கர்நாடகம்: கடந்த 10 மாதத்தில் சாலை விபத்துகளால் 7,523 பேர் பலி
Updated On :28 ஜனவரி 2024, 4:35 am

DIN

கர்நாடகத்தில் கடந்த 10 மாதத்தில் நடந்த சாலை விபத்துகளில் இதுவரை 7,523 பேர் பலியாகியிருப்பதாக அம்மாநில போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கர்நாடகத்தில் இந்தாண்டு ஜனவரி 1 - அக்.21 ஆம் தேதி வரை நிகழந்த 28,036 சாலை விபத்துகளில் 7,523 பேர் பலியாகியிருக்கிறார்கள். 33,864 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

தொடர்ந்து சாலை விபத்துகள் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் அதைத் தடுக்கும் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மாநிலக் காவல்துறையினர் தெரிவித்திருத்திருக்கிறார்கள்.

மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் நிழந்த 34,178 சாலை விபத்துகளில் 9,760 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.