கோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ.3.75 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
கேரளத்தின் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் துபை மற்றும் சார்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட 7.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.


கேரளத்தின் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் துபை மற்றும் சார்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட 7.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இன்று துபையிலிருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த நிதின் ஜார்ஜ் என்கிறப் பயணியைப் பரிசோதனை செய்தபோது உள்ளாடையில் மறைத்து 2.5 கிராம் தங்கத்தைக் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சார்ஜாவிலிருந்து கோழிக்கோடு வந்த பயணியைப் பரிசோதனை செய்தபோது அவரிடமிருந்து 676 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதிகப்படியாக அட்டைப் பெட்டியில் உருக்கி 3 பேரால் மறைத்து எடுத்து வரப்பட்ட 5.12 கிலோ தங்கத்தையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.3.75 கோடி என அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
முன்னதாக கடந்த அக்-29 ஆம் தேதி சார்ஜாவிலிருந்து கொச்சி விமான நிலையத்திற்கு ரூ.2.40 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...