டீ விற்று மனைவியுடன் 26 நாடுகளுக்கு சுற்றுலா சென்றவர்; இம்முறை..?

உலகம் சுற்றும் வாலிபனாகத் திகழ்ந்த கேரளத்தைச் சேர்ந்த டீ விற்பனையாளர் கே.ஆர். விஜயன் (71) காலமானார். 
டீ விற்று மனைவியுடன் 26 நாடுகளுக்கு சுற்றுலா சென்றவர்; இம்முறை..?
டீ விற்று மனைவியுடன் 26 நாடுகளுக்கு சுற்றுலா சென்றவர்; இம்முறை..?
Published on
Updated on
1 min read


கொச்சி: உலகம் சுற்றும் வாலிபனாகத் திகழ்ந்த கேரளத்தைச் சேர்ந்த டீ விற்பனையாளர் கே.ஆர். விஜயன் (71) காலமானார். 

தனது மனைவி மோகனாவுடன்  பல உலக நாடுகளுக்கும் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற கனவு வெள்ளிக்கிழமை  நிறைவு பெற்றது. விஜயன் மாரடைப்பால் காலமானார். பல நாடுகளுக்கு தனது மனைவியுடன் சென்று சுற்றுலாவைக் கழித்த விஜயன், தனது இறுதிப் பயணத்தின் போது மனைவியை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அதற்கு மாறாக தானும் மனைவியும் ஒன்றாக சுற்றுலாச் சென்ற பயணங்களை மோகனாவுக்காக விட்டுச் சென்றுள்ளார்.

கொச்சியின் காந்தி நகரில் ஸ்ரீபாலாஜி  என்ற தேநீர் கடையை மோகனாவும் விஜயனும் இணைந்து நடத்தி வருகிறார்கள். அண்மையில் இந்த தம்பதி ரஷ்யாவுக்கு சுற்றுலாச் சென்றிருந்தனர். அங்கிருந்து திரும்பிய சில காலத்திலேயே விஜயன் மரணமடைந்துவிட்டார்.

டீ விற்று அதனால் கிடைக்கும் பணத்தை சிறுக சிறுக சேமித்துதான், இந்த தம்பதி தங்களது சர்வதேச சுற்றுலாவை மேற்கொண்டு வந்தனர். அவர்கள் தாங்களது வருவாயில் தினமும் ரூ.300-ஐ உலக நாடுகளை சுற்றிப்பார்க்க என்று சேமித்துவைத்து விடுவார்களாம். இப்படியே சேமித்து வைத்து, கடந்த 16 ஆண்டுகளில் இதுவரை 26 நாடுகளுக்கு இருவரும் சுற்றுலாச் சென்றுள்ளனர்.

இவர்களைப் பார்த்து பலரும் இதுபோல சேமித்து உலக சுற்றுலாவை மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனராம்.

இவ்வாறு உலகத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவள், அவரது சிறு வயதிலேயே தோன்றியதாம். அவரது தந்தை, சிறு வயது முதலே, அவரை அழைத்துக் கொண்டு பல்வேறு ஊர்களுக்கும் சுற்றுலா செல்வாராம். அப்போதிலிருந்து சுற்றுலா மீது ஆர்வம் ஏற்பட்டு, அவர் வளர்ந்த பிறகு, உலக நாடுகளைச் சுற்றிப் பார்க்க ஆவள் ஏற்பட்டு, அதனை நிறைவேற்றியும் உள்ளார்.

முதல் முறையாக, 2007ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குச் சென்றதுதான் தங்களது முதல் உலக சுற்றுலாவாக இருந்ததாம். இது மட்டுமல்ல, வங்கியில் கடன் வாங்கி, அதனைக் கொண்டும் சுற்றுலா சென்றுள்ளனராம். பிறகு தேநீர் கடையில் வரும் வருவாயைக் கொண்டு கடனை அடைத்துவிடுவார்களாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com