/

பிரதமரை இன்று மாலை சந்திக்கிறார் மம்தா

பிரதமர் நரேந்திர மோடியை புதன்கிழமை மாலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திக்கவுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 5:32 am

DIN

பிரதமர் நரேந்திர மோடியை புதன்கிழமை மாலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திக்கவுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தில்லிக்கு 5 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள மம்தா பானர்ஜி பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார். மேலும், வெவ்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள் மம்தா முன்னிலையில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியை இன்று மாலை 5 மணிக்கு மம்தா சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின்போது, எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரவரம்பு அதிகரிக்கப்பட்டதை திரும்பப் பெற வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து பாஜகவின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமியையும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.