பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியுடன் மம்தா சந்திப்பு
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை புதன்கிழமை மாலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்தார்.


பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை புதன்கிழமை மாலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்தார்.
தில்லிக்கு 5 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள மம்தா பானர்ஜி பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார். மேலும், வெவ்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள் மம்தா முன்னிலையில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக முத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமியை இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து பிரதமர் மோடியை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கும் மம்தா, எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரவரம்பு அதிகரிக்கப்பட்டதை திரும்பப் பெற வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...