‘குளிர்காலக் கூட்டத்தொடரை புறக்கணிப்போம்’: கே.சி.வேணுகோபால்
மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து குளிர்காலக் கூட்டத்தொடரை புறக்கணிக்க உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.


மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து குளிர்காலக் கூட்டத்தொடரை புறக்கணிக்க உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரு எம்.பி.க்களும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி.யும் மாநிலங்களவையின் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்வதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் கூறுகையில்,
மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடரை புறக்கணிக்க உள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...