மேகாலய ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பலி 8 ஆக உயர்வு!
மேகாலயத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.


மேகாலயத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
மேகலாலய மாநிலம் துரா என்ற பகுதியில் இருந்து தலைநகர் ஷில்லாங் பகுதிக்குச் சென்ற பேருந்து, மேம்பாலத்தில் செல்லும்போது நிலை தடுமாறி ரிங்டி(Ringdi) ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது. கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் நோங்சரம் என்ற பகுதியில் புதன்கிழமை (செப்.29) நள்ளிரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்த நிலையில் ரோங்சங் மருத்துவமனை மற்றும் வில்லியம்நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ரோங்ஜெங் மற்றும் வில்லியம் நகர் பகுதி தீயணைப்புப்படையினர் ஈடுபட்டிருந்தனர்.
துரா பகுதியைச் சேர்ந்த 9 பேரும் வில்லியம் நகர் பகுதியைச் சேர்ந்த 12 பேரும் இதில் பயணித்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், அன்றைய தினமே மேலும் ஒருவரது உடல் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.
இதையடுத்து இன்று(வெள்ளிக்கிழமை) காலை மேலும் இருவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | மேகாலயம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 5 பேர் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...