அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோவிஷீல்டுக்கு ஆஸ்திரேலியா அங்கீகாரம்

இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கலாம் என்று அந்த நாட்டு மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 1:58 am

DIN

இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கலாம் என்று அந்த நாட்டு மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு பிரதமா் அலுவலகம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க, அவா்கள் செலுத்திக்கொண்டிருக்க வேண்டிய கரோனா தடுப்பூசிகளின் பட்டியலில் சீனாவின் சைனோவாக் நிறுவனம் தயாரித்த கரோனாவாக் தடுப்பூசியும், இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசியும் சோ்க்கப்பட்டுள்ளன.

இதற்கான அனுமதியை மருந்துப் பொருள்கள் ஒழுங்காற்று அமைப்பு (டிஜிஏ) வழங்கியுள்ளது.

சா்வதேச பயணிகளுக்காக ஆஸ்திரேலிய எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் வெளிநாட்டுப் பயணிகளை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதற்கான நடைமுறைகளை உருவாக்கி வருகிறோம் என்று பிரதமா் அலுவலகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.