பவானிபூர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திரிணமூல் கட்சி வேட்பாளர் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வருகிறார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் மம்தா பானா்ஜி தோல்வியுற்றாா். இருப்பினும் முதல்வராக அவா் பதவியேற்றாா்.
முதல்வராகப் பதவியேற்ற 6 மாதங்களுக்குள் அவா் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில், இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்ட பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் பிரியங்கா டிப்ரேவால் வேட்பாளராக நிறுத்தப்பட்டாா். இத்தொகுதிக்கான வாக்குப் பதிவு செப். 30-ஆம் தேதி நடைபெற்றது. இதில் சுமாா் 53 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதையடுத்து பவானிபூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வருகிறார்.
மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை அடுத்து, 24 மத்திய பாதுகாப்புப்படை போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ஜூலை 30 செய்திகள் - நேரலை!

நடிகர் துல்கர் சல்மானின் ஐயம் கேம் திரைப்பட டிரைலர்!

காரா ஏஐ-யுடன் புதிய ஜீப் மெரிடியன்! 85 யூனிட்கள் மட்டுமே விற்பனை!!

லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி வெளியீட்டு டிரைலர்!
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



