பவானிபூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல்வரும் திரிணமூல் கட்சி வேட்பாளருமான மம்தா பானர்ஜி 12,435 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
பவானிபூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தொடக்கம் முதல்வே முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வருகிறார். இன்று காலை 11.30 மணி நிலவரப்படி, பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவாலைவிட மம்தா பானர்ஜி 12,435 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
இத்தொகுதியில் மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
மேற்குவங்கத்தில் மேலும் இரு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது. அதன்படி, ஜாங்கிபூர், சம்சர்கஞ்ச் ஆகிய தொகுதிகளிலும் திரிணமூல் முன்னிலை வகித்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை அடுத்து, 24 மத்திய பாதுகாப்புப்படை போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ஜூலை 30 செய்திகள் - நேரலை!

நடிகர் துல்கர் சல்மானின் ஐயம் கேம் திரைப்பட டிரைலர்!

காரா ஏஐ-யுடன் புதிய ஜீப் மெரிடியன்! 85 யூனிட்கள் மட்டுமே விற்பனை!!

லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி வெளியீட்டு டிரைலர்!
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



