மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

இம்மாதிரியான தாக்குதல்களை எதிர்கொள்ள பயிற்சிபெற்றுள்ளோம்: ராகுல் காந்தி

லக்கிம்பூர் கெரிக்கு செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இரண்டு மாநில முதலமைச்சர்களுடன் அங்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.

News image
ராகுல் காந்தி
Updated On :6 அக்டோபர் 2021, 7:42 am

DIN

லக்கிம்பூர் கெரிக்கு செல்லும் வழியில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், "நான் இதனால் கவலைப்படவில்லை. இம்மாதிரியான வற்புறுத்தல்களை எதிர்கொள்ள பயிற்சிபெற்றுள்ளோம்.

நானோ பிரியங்காவோ இம்மாதிரியான வற்புறுத்தல்களால் கவலை அடைய மாட்டோம். எங்களை உங்களால் அடித்து விட முடியும். எங்கள் மீது தாக்குதல் நடத்துங்கள். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே, எங்கள் குடும்பம் இதில் எங்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார்கள்" என்றார்.

சம்பவம் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமையன்று, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருக்கின்றனர். 

அப்போது, லக்கிம்பூரில் அவர்களுக்கு விவசாயிகள் கருப்புக் கொடி காட்டினர். 

இதையடுத்து, விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. துணை முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். வாகனம் கூட்டத்திற்குள் புகுந்ததில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்த நிலையில், 8 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர்.

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க எதிர்கட்சி தலைவர்களுக்கு உத்தரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளது. சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, நான்கு பேருக்கு மேல் அங்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து கருத்து கூறிய அவர், "இரண்டு முதலமைச்சர்களுடன் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளோம். நாங்கள் மூவர் மட்டும் தான் செல்ல போகிறோம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.