அடுத்த ஆண்டு ஏற்றுமதி மதிப்பை 450 முதல் 500 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சிலிடம் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டார்.
ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் தலைவர்களுடன் இடைக்கால ஆய்வு கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை விரைவில் இறுதி செய்யப்படுவதற்கு முன்பாக, அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்த வேண்டும். இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 197 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.