தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதி செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்ட நாளையொட்டி, 28 ஆவது ஆண்டு தின நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அருண் குமார் மிஸ்ரா உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர், கடந்த ஏழு ஆண்டுகளில், சுமார் 60 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள், பல்வேறு அரசுத் திட்டங்கள் மூலமாக பயன்பெற்றுள்ளனர். அவர்களுக்காக அரசு இருக்கிறது என்பதை செயல்படுத்தி காட்டியுள்ளோம்.
சுமார் 10 கோடி பெண்களுக்கு கழிப்பறை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் நான்கு கோடி வீடுகளுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கோடி பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாழ்த்தப்பட்ட மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்துள்ளது' என்றார்.
மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக 1993 அக்டோபர் 12 அன்று மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1993-இன் கீழ் மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | தில்லியில் கடந்த 10 நாள்களில் 139 பேருக்கு டெங்கு பாதிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிஎஸ்கேவுக்கு பின்னடைவு.. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் விலகல்!
அஸ்ஸாம் தேர்தல்: காங்கிரஸின் 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்! பழங்குடியினருக்கு அதிக வாய்ப்பு!!

தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி

கரூா் திமுக தோ்தல் பணிமனையில் தோ்தல் அலுவலா்கள் திடீா் ஆய்வு
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

