உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மகாராஷ்டிரம்: பக்ரீத்தையொட்டி பலியிட ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: பன்றிகளுடன் போராட்டம்!

ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - இரு தரப்புக்கு இடையே மோதல்...

A man with a goat displayed at a livestock market ahead of Bakra Eid (Eid al-Adha) festival, near Jama Masjid, in New Delhi, Tuesday, May 26, 2026. (PTI Photo)

ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - கோப்புப்படம் PTI

Published On :

மும்பை: மகாராஷ்டிரத்தில் மும்பை அருகே தாணேவில் பக்ரீத் பண்டிகையையொட்டி பலியிடுவதற்காக குடியிருப்பு வளாகத்தில் ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்களுடன் வலதுசாரி பிரிவினரும் ஒரே இடத்தில் திரண்டதால் பதற்றம் நிலவியது.

தாணே நகரில் மீரா சாலைப் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகமொன்றில் ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இதைப் பற்றிய தகவல் வெளியான நிலையில், சம்பவ இடத்துக்குச் சென்று முற்றுகையிட்ட குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் வலதுசாரி பிரிவினர் ஆடுகளை குடியிருப்பு பகுதியில் அடைத்து வைத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே, பன்றிகளை தங்களுடன் எடுத்துச் சென்று வலதுசாரி பிரிவினர் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் இரு தரப்பிடமும் பேசி பதற்றத்தைத் தணித்தனர். சண்டை தீவிரமடையாமல் தடுக்க அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Summary

Thane : Clashes erupt in Mumbai’s Mira Road as residents of Poonam Cluster Society protest against having goats inside the premises for sacrifice during the festival of Eid Al-Adha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.