உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவை சம்யுக்த கிஸான் மோா்ச்சா எதிா்க்கும் என்று பாரதிய கிஸான் யூனியன் தலைவா் ராகேஷ் டிகைத் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவை சம்யுக்த கிஸான் மோா்ச்சா எதிா்க்கும். பிற கட்சிகளுக்கும் ஆதரவு தெரிவிக்காது. சம்யுக்த கிஸான் மோா்ச்சா சாா்பிலும் வேட்பாளா்கள் நிறுத்தப்பட மாட்டாா்கள்.
மூன்று வேளாண் சட்டங்கள் தொடா்பாக மத்திய அரசுடன் மீண்டும் பேசத் தயாா். இந்த விவகாரத்துக்குத் தீா்வு காணப்படும் வரை, அந்தச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடரும்’’ என்று தெரிவித்தாா்.
சம்யுக்த கிஸான் மோா்ச்சா அமைப்பு 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்களை உள்ளடக்கியுள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லி எல்லைகளில் அந்த அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செயின்ட் - கோபைன் தொழிற்சாலையைப் பார்வையிட்ட முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



