செக்கோஸ்லோவேகியா விஞ்ஞானியின் பிறந்தநாளையொட்டி பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு கௌரவித்துள்ளது.
செக்கோஸ்லோவேகியா நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் ஓட்டோ விக்டர்லேயின் 108 ஆவது பிறந்தநாள் இன்று. 1913 ஆம் ஆண்டு அக்டோபர் 27ல் செக்கோஸ்லோவேகியா குடியரசின் (அப்போதைய ஆஸ்திரியா-ஹங்கேரி) ப்ரோஸ்டெஜோவில் விக்டர்லே பிறந்தார்.
அறிவியலில் அதீத ஆர்வம் கொண்ட விக்டர்லே, 1936 ஆம் ஆண்டில் ப்ராக் இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் கரிம வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1950களில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் தனது ஆய்வில், கண் சிகிச்சையில் பயன்படுத்தும் ஜெல்லைக் கண்டுபிடித்தார். அதன் தொடர்ச்சியாக கான்டக்ட் லென்ஸைக் கண்டுபிடித்தார்.
கண் பார்வை குறையுடையவர்களுக்கு கண்ணாடிக்கு மாற்றாக, மென்மையான கான்டாக்ட் லென்ஸைக் கண்டுபிடித்த இவரின் பிறந்தநாளை கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டு கூகுள் கௌரவித்துள்ளது.
இதையும் படிக்க | வீட்டில் சுத்தம் செய்ய மறந்துபோகும் 8 முக்கிய பொருள்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ரூ. 33,660 கோடியில் பாரத தொழில் மேம்பாட்டுத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ. 1.15 லட்சம் பறிமுதல்

தமிழகத்தில் ரூ.42.65 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்: தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

மூத்த வாக்காளா்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

