வீட்டில் சுத்தம் செய்ய மறந்துபோகும் 8 முக்கிய பொருள்கள்!

வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் பெண்களின் பங்கு அளப்பரியது. வீட்டில் ஆண்களும் சரி குழந்தைகளும் சரி எடுத்த பொருள்களை எடுத்த இடத்தில் வைப்பதில்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாம் வாழும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் பெண்களின் பங்கு அளப்பரியது. வீட்டில் ஆண்களும் சரி குழந்தைகளும் சரி எடுத்த பொருள்களை எடுத்த இடத்தில் வைப்பதில்லை. அதுமட்டுமின்றி, வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் இலக்காகவே இருக்கும்.

முக்கிய நாள்களில் ஒட்டுமொத்தமாக வீட்டில் உள்ள அனைத்து பொருள்களையும் சுத்தம் செய்யும்போது நமக்கே தெரியாமல் சில பொருள்களை சுத்தம் செய்வதை மறந்துவிடுகிறோம். 

அவ்வாறு சில பொருள்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. 

சுவிட்சுகள் 

மின் சாதனப் பொருள்களைக்கூட அடிக்கடி சுத்தம் செய்யும் நாம், சுவிட்சுகளை சுத்தம் செய்ய பெரும்பாலும் மறந்துவிடுகிறோம். மிகவும் சிறிய பகுதி என்பதாலும் தொடர்ந்து உபயோகிப்பதாலும் சுவிட்சுகளை சுத்தம் செய்வதில்லை. தற்போது கரோனா பரவல் சூழ்நிலையில் அடிக்கடி சுவிட்சுகளைத் தொடுவதால் அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். 

வாஷிங் மெஷின் 

துணிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் வாஷிங் மெஷின்களை சுத்தம் செய்ய மறந்துவிடுகிறோம். வாஷிங் மெஷின் உள்புறத்துடன் மேல்புறமும் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். 

காபி இயந்திரம் 

வீடுகளில் கூட இப்போதெல்லாம் காபி இயந்திரங்கள் வந்துவிட்டன. சுத்தம் செய்ய மறக்கும் பொருள்களில் இதுவும் ஒன்று. பெரும்பாலான இடங்களில் காபி இயந்திரங்கள் அசுத்தமாகவே இருக்கின்றன. 

ஹேர் பிரஷ் மற்றும் சீப்புகள் 

பெண்கள் என்றால் வாரத்திற்கு இருமுறையும் ஆண்கள் என்றால் வாரத்தில் அனைத்து நாள்களில் பெரும்பாலாக தலைக்கு குளிப்பதுண்டு. தலையை அதாவது தலைமுடியை சுத்தம் செய்யும் நாம் தலைமுடியை வாறும் சீப்புகளை அடிக்கடி சுத்தம் செய்ய மறந்துவிடுகிறோம். நீங்கள் தலைமுடியை சுத்தம் செய்து அழுக்கான சீப்பு கொண்டு வாரினால் தலைமுடியிலும் அழுக்கு ஒட்டிக்கொள்ளும்தானே? 

மின் விளக்குகள் 

பெரும்பாலாக மின்விசிறியை சுத்தம் செய்யும் நாம் ட்யூப் லைட், பல்புகளை சுத்தம் செய்வதில்லை. மின் விளக்கை அணைத்துவிட்டு அல்லது அவற்றிலிருந்து கழற்றிவிட்டு சுத்தம் செய்யுங்கள். 

யோகா மேட் 

யோகா செய்யும் பழக்கம்  இன்று பலரிடையே அதிகரித்து வருகிறது. அது நல்ல விஷயமும் கூட. அதற்கு யோகா மேட் பயன்படுத்துபவரும் பலர். காலை எழுந்தவுடன் அதன் மீதே யோகா செய்கிறோம். ஆனால், அவற்றை சுத்தம் செய்யும் வழக்கம் பலரிடத்தில் இல்லை. 

டிவி ரிமோட் 

வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் அல்லது வீட்டில் உள்ள பெண்கள் ஓய்வு நேரத்தில் முதலில் கையில் எடுப்பது டிவி ரிமோட். நாள் முழுவதும் வீட்டில் யாரேனும் ஒருவர் அதனைப் பயன்படுத்திக்கொண்டு தான் இருப்பர். அதிலும் அழுக்குகள் இருக்கும் என்பதால் உங்களை நோய்த்தொற்றில் இருந்து காத்துக்கொள்ள அத்தனையும் சுத்தம் செய்யுங்கள். 

ஐஸ் டிஸ்பென்ஸர் 

பிரிட்ஜை சுத்தம் செய்யும் பெரும்பாலானோர் ஐஸ் டிஸ்பென்ஸரை சுத்தம் செய்வதைத் தவிர்த்துவிடுவர். இனிமேலாவது பிரிட்ஜை சுத்தம் செய்யும்போது அதையும் சேர்த்து சுத்தம் செய்யுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com