2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கேரளத்தில் படகு கவிழ்ந்ததில் 4 மீனவர்கள் பலி

கேரளத்தில் கடலில் படகு கவிழ்ந்ததில் 4 மீனர்வர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள். 

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 10:39 am

DIN

கேரளத்தில் கடலில் படகு கவிழ்ந்ததில் 4 மீனர்வர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.

கேரளம் மாநிலம் கொல்லத்திலிருந்து 5 நாட்டிகல் மைல் தொலைவில் படகு ஒன்றில் மீனவர்கள் மீன்பிடித்து கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் 4 மீனவர்கள் நீரிழ் மூழ்கி பலியானார்கள். 

மேலும் 12 மீனவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரிய அலை மற்றும் மீன்பிடி வலை படகில் சிக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக மீனவர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே இச்சம்பவத்தின் போது 16 பேர் படகில் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.