கேரளத்தில் 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கரோனா பாதிப்பு
கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 29,322 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 29,322 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,63,691 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 29,322 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக திரிச்சூரில் 4,334, எர்ணாகுளத்தில் 3,768, கோழிக்கோட்டில் 3,531 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 2,46,437 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 131 பலியானார்கள்.
இதையும் படிக்க | ஆந்திரத்தில் புதிதாக 1520 பேருக்கு கரோனா தொற்று
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 21,280ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 22,938 பேர் மீண்டனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 38,83,186 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...