மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 3,595 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் புதிதாக 3,595 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் புதிதாக 3,595 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,595 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 65,11,525ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 45 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,38,322 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 3,240 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 63,20,310ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க- முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?
தற்போதைய நிலவரப்படி 49,342 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 5,65,29,882 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...