எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கரோனாவுக்கு எதிராக 130 நாள்கள் போராட்டம்; பெருந்தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நபர்

சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நபர், நீண்ட நாள்களுக்கு பிறகு வீட்டுக்கு திரும்பிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

News image
பெருந்தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நபர்
Updated On :16 செப்டம்பர் 2021, 6:14 am

DIN

உத்தரப் பிரதேசம் மீரட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் 130 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளதாக நுடெமா மருத்துவமனை மருத்துவர் புதன்கிழமை தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, விஸ்வாஸ் சைனிக்கு கரோனா இருப்பது உறுதியானது. 

இதுகுறித்து மருத்துவர் அவ்னீத் ராணா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "அவருக்கு கரோனா இருப்பது ஏப்ரல் 28ஆம் தேதி உறுதியானது. தொடக்கத்தில், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

அவருடைய ஆக்ஸிஜன் நிலை 16ஆக இருந்ததால், செயற்கை சுவாச கருவி வழியே அவருக்கு ஒரு மாதம் வரை சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சைனிக்கு மன உறுதி இருந்தது. எனவேதான், அவரால் நோயுக்கு எதிராக 130 நாள்கள் போராட முடிந்தது" என்றார்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சைனி, "நீண்ட நாள்களுக்கு பிறகு வீட்டுக்கு திரும்பிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், மருத்துவமனையில் என்னுடன் இருந்த நோயாளிகள் கரோனா காரணமாக உயிரிழக்கும்போது பயமாக இருந்தது. மருத்துவர் எனக்கு ஊக்கமளித்து கரோனாவிலிருந்து மீள வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி கொண்டே இருந்தார்" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.