போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நாட்டில் புதிதாக 30,570 பேருக்கு கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,570 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :16 செப்டம்பர் 2021, 4:11 am

DIN


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,570 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 30,570 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,33,47,325 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 38,303 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 431 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 3,25,60,474 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 4,43,928 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 3,42,923 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் இது 1.03 சதவிகிதம்.

குணமடைவோர் விகிதம் 97.64 சதவிகிதமாக உள்ளது.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் 64,51,423 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதுவரை மொத்தம் 76,57,17,137 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.