உ.பி.யில் 31 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை

உத்தரப் பிரதேசத்தில் 31 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தரப் பிரதேசத்தில் 31 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

மாநில சுகாதாரத்துறையின் தரவுகளின்படி, அலிகார், அம்ரோஹா, அவுரையா, அயோத்தி, அசம்கர், பல்லியா, பண்டா, பஸ்தி, பஹ்ரைச், பதோஹி, பிஜ்னோர், ஈட்டா, ஃபருக்காபாத், கோண்டா, ஹமிர்பூர், ஹபூர், ஹத்ராஸ், கான்பூர் தேஹாத், கஸ்கஞ்ச், இன் மஹோபா, மிர்சாபூர், மொராதாபாத், முசாபர்நகர், பிலிபித், பிரதாப்கர்க், ராம்பூர், சஹரன்பூர், ஷாம்லி, ஷ்ரவஸ்தி மற்றும் சுல்தான்பூர் ஆகிய 31 மாவட்டங்களில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை பூஜ்யமாக உள்ளது.

மாநில சுகாதார அறிக்கையின்படி, உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 1,82,742 மாதிரிகளில் 17 பேருக்கு மட்டுமே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று 15 பேர் உள்பட இதுவரை 16, 86,599 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். 

தற்போது  மாநிலத்தில் மொத்தம் 194 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 98.7 சதவீதம் பேர் மீண்டுள்ளனர். 

மாநில அரசு இதுவரை 7.65 கோடிக்கும் அதிகமான சோதனைகளை நடத்தியுள்ளது. சராசரியாக, ஒவ்வொரு நாளும் 2.5 லட்சம் சோதனைகள் செய்யப்படுகின்றன.

இதுவரை 9.42 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், அதில் 1.66 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com