மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா தடுப்பூசி இயக்கம் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு வகைகளில் தடுப்பூசி இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மையங்களில் நேரில் வந்து தடுப்பூசி போட்டுகொள்ள முடியாதவர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
'தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு வீட்டிலேயே தடுப்பூசிகளைத் தொடங்குகிறோம். இதற்காக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்படும்' என்று நிதி ஆயோக்கின் டாக்டர் வி.கே. பால் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள், நடக்க முடியாத முதியோர், சிறப்பு தேவை வேண்டுவோருக்கு வீட்டில் சென்று தடுப்பூசி செலுத்த மாவட்ட அளவில் அனைவரும் ஒருங்கிணைக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

காட்டகரம் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

சந்தானம் வித்யாலயா பள்ளி மாணவருக்குப் பாராட்டு

புகாா் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


