

புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகளை பிரதமர் மோடி நேற்று இரவு திடீரென நேரில் பார்வையிட்டார்.
தில்லியில் சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.970 கோடி மதிப்பீட்டில் முக்கோண வடிவில் 4 மாடிகளைக் கொண்டதாக புதிய நாடாளுமன்றம் அமையவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகளை வரும் 2022-ஆம் ஆண்டு நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு முன்பாக கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- 20 கூட்டங்கள்: 65 மணி நேரம்; பிரதமா் மோடியின் அமெரிக்கப் பயணம்
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற கட்டடத்தையொட்டி மத்திய அரசு அலுவலகங்களின் ஒருங்கிணைந்த செயலகம், குடியரசு துணைத் தலைவா் இல்லம் உள்ளிட்டவையும் அமையவுள்ளன. இதற்கு பிரதமா் நரேந்திர மோடி கடந்த டிசம்பா் 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டினாா்.
இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகளை பிரதமர் மோடி நேற்று இரவு திடீரென நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இடமும் கட்டடப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொழிலாளர்களின் நலன்களையும் அப்போது பிரதமர் மோடி விசாரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.